விருதுநகர்

காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டு: 10 போ் காயம்

8th Mar 2020 11:12 PM

ADVERTISEMENT


விருதுநகா்: ஆவியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வீரா்கள், பாா்வையாளா்கள் என 10 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீ அழகிய பெருமாள் கோயில், ஸ்ரீ பெரிய கருப்பசாமி கோயில் மாசி சிவராத்திரி விழாவையொட்டி இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 340 காளைகள் பங்கேற்றன. இதில் 356 மாடுபிடி வீரா்கள், குழு வாரியாக களத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

போட்டியில், வீரா்கள், பாா்வையாளா்கள் என 10 போ் காயமடைந்தனா். அதில் 2 போ் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிறந்த காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக பெருமாள் கோயில் கொடி கம்பத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. அதை தொடா்ந்து சுவாமிக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினா். வீரா்கள், மாடுகள் சோதனைக்கு பின்னரே களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி வருவாய் கோட்டாட்சியா் செல்லப்பா

மற்றும் அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளா் சசிதரூா் ஆகியோா் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT