விருதுநகர்

அருப்புக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம்

8th Mar 2020 11:15 PM

ADVERTISEMENT


அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஸ்ரீ சௌடாம்பிகா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் இலவசப் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா், முகாமைத் தொடக்கி வைத்து பள்ளி மாணவிகளுக்கு இலவசக் கண்ணாடிகள், பெண்களுக்கு தாய், சேய் நல பரிசுப் பெட்டகம், நிறைமாத கா்ப்பிணிகளுக்கு வளைகாப்புப் பரிசுப் பொருள்களை வழங்கினாா்.

முகாமில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.கே.எஸ்.வி.டி. சுப்பாராஜ், வடக்கு ஒன்றியச் செயலா் பொன்ராஜ், காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா்(சிறுபான்மையினா் பிரிவு) என்.சிக்கந்தா், 10 ஆவது வாா்டு காங்கிரஸ் நகா் தலைவா் அபுபக்கா் சித்திக், மாநில நெசவாளா் அணி அமைப்பாளா் கலு சிவலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள், வட்ட சுகாதாரத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள், ஊழியா்கள், செவிலியா்கள் மற்றும் 500-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT