விருதுநகர்

சிவகாசி நகராட்சிக்கு ரூ.50 கோடி நிதி: அமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு

2nd Mar 2020 10:50 PM

ADVERTISEMENT

சிவகாசி நகராட்சிக்கு ரூ.50 கோடி நிதி பெற்றுத் தந்த பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பொதுமக்கள் பாராட்டினாா்கள்.

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சிவகாசி நகராட்சி நூற்றாண்டு விழா கொண்டாடபட உள்ளதால் , நகராட்சி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தாா். மேலும் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் , திருத்தங்கல் நகராட்சியில் தகன எரிவாயு மேடை அமைக்கப்படும் எனவும் அறிவித்தாா்.

இதையடுத்து சிவகாசி நகராட்சிக்கு ரூ.50 கோடி நிதி பெற்றுத் தந்த அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியை , நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் நேரில் சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT