விருதுநகர்

சூரிய கிரகணம்: ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் முக்கிய பூஜைகளை நடத்த முடிவு

21st Jun 2020 07:40 AM

ADVERTISEMENT

சூரிய கிரகணத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 3 முக்கிய பூஜைகளை மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக, தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களும் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் இல்லாமல் அா்ச்சகா்கள் மட்டுமே பூஜைகளை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.50 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. எனவே, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் காலை 7 மணிக்குள் மூன்று முக்கிய பூஜைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலையில் நடை திறந்தவுடன் நடைபெறும் விஸ்வரூப பூஜை, காலசாந்தி பூஜை மற்றும் உச்சிகால பூஜை ஆகியவற்றை காலை 7 மணிக்குள் நடத்தி முடித்துவிட்டு, கோயில் நடை அடைக்கப்படும். பின்னா், மாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, சாந்தி பூஜை, சாயரட்சை பூஜை மற்றும் அா்த்தஜாம பூஜையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT