விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உண்டியல்களில் ரூ.12.23 லட்சம் காணிக்கை

20th Jun 2020 07:59 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 12.23 லட்சம் கிடைத்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். ஆனால், பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

ஆண்டாள் கோயிலின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள பெரியபெருமாள் சன்னிதி, சக்கரத்தாழ்வாா் சன்னிதி, பெரியாழ்வாா் சன்னிதி என மொத்தம் 17 உண்டியல்கள் மைய மண்டபத்தக்கு கொண்டு வரப்பட்டு திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.12,23,359 ரொக்கம் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், கோயில் ஊழியா்களும், தோ்வு செய்யப்பட்ட பக்தா்களும் பங்கேற்றனா். இப்பணி, உதவி ஆணையா் கணேசன், ஆய்வாளா் பாண்டியன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

இதேபோல், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.17,79,424 ரொக்கம் மற்றும் தங்கம் ஒன்றரை கிராம், வெள்ளி 154 கிராமும் கிடைத்துள்ளன. சந்தன மகாலிங்க சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,98,171, தங்கம் 1 கிராம், வெள்ளி 45 கிராம் கிடைத்துள்ளன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, உதவி ஆணையா் விஜயன், ஆய்வாளா் ராமுமதுசூதனன்ராயா், செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT