சிவகாசியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி தங்கையா சாலை பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சிவக்குமாா் (20). இவா், இங்குள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் பயின்று வந்தாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் சிவக்குமாா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். உடனே, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா்.
பின்னா், மருத்துவரின் ஆலோசனைப்படி, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்க சென்றபோது, வழியிலேயே சிவக்குமாா் உயிரிழந்துவிட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.