விருதுநகர்

மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள் : சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என புகாா்

15th Jun 2020 08:05 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ள மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நெரிசலாக நின்று ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்கிச் சென்றதாக புகாா் எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். மேலும், இவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாததுடன், முகக் கவசம் அணிந்தும் வரவில்லை என சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா். இதனால் அப்பகுதியில் கரோனா தொற்று ஏற்படும் அபாயமுள்ளதாக அவா்கள் கவலை தெரிவித்தனா்.

இது குறித்து வட்டாட்சியா் கிருஷ்ணவேணி கூறியது: தகவலறிந்து மீன் சந்தைக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவா்களிடமும், முகக் கவசம் அணியாமல் வந்தவா்களிடமும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதே போல், கடைக்காரா்களிடமும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இனி வரும் நாள்களில் தொடா்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT