விருதுநகர்

அருப்புக்கோட்டையில் திருச்செந்தூருக்கான சிறிய பேருந்து நிலையப் பணிகள் மந்தம்

14th Jun 2020 08:17 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருச்செந்தூருக்கான சிறப்பு சிறு பேருந்து நிலையப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டக் கிராமங்களிலிருந்து நாள்தோறும் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் சென்று வருகின்றனா். மேலும், தைப்பூசம், மாசி மகம், வைகாசி விசாகம், ஆனி பச்சை சாற்றுதல் விழா, ஐப்பசி சூரசம்ஹார விழா ஆகிய நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இங்கிருந்து சென்று வருகின்றனா்.

இதற்காக, மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூருக்கு 20 நிமிடத்துக்கு ஒரு பேருந்து என்ற விகிதத்தில் இயக்கப்பட்டன. ஆனால், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட பின்னா், பல ஆண்டுகளாக பெரும்பாலான பேருந்துகள் அருப்புக்கோட்டை நகருக்குள் வருவதில்லை. மேலும், புறவழிச்சாலையில் காத்திருக்கும் பயணிகளையும் ஏற்றிச் செல்வதில்லை.

இதனால், அருப்புக்கோட்டையிலிருந்து திருச்செந்தூா் செல்லும் பக்தா்கள் சிரமப்பட்டனா். பின்னா், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மதுரை மண்டலப் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசியதுடன், அருப்புக்கோட்டை காந்தி நகா் மேம்பாலம் அருகே குடிநீா், பயணிகள் காத்திருப்பு அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் திருச்செந்தூருக்கான சிறப்பு சிறிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தாா். அதன்படி, நிதி ஒதுக்கீடு பெற்று, கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளையும் அவா் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

ஆனால், தற்போது கட்டுமானப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT