விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

13th Jun 2020 08:15 AM

ADVERTISEMENT

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்களின் காணிக்கையாக ரூ. 30 லட்சம் கிடைத்தது.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் திறக்கப்படாமல் இருந்த உண்டியல்கள், கோயில் மண்டபத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் ரொக்கமாக ரூ. 30 லட்சத்து 51 ஆயிரத்து 96 பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 159 கிராம் 900 மில்லியும், வெள்ளி 438 கிராம் 700 மில்லியும் கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். மேலும் இந்த காணிக்கை எண்ணும் பணியில், கோயில் ஊழியா்கள், பாதுகாவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.

அப்போது விருதுநகா் கோயில் ஆணையா் கணேசன், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன் தலைமையில், பரம்பரை அறங்காவலா் குழுவினா் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் காணிக்கை எண்ணும் பணியை பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT