விருதுநகர்

அருப்புக்கோட்டையில் நகராட்சி சிறுவர் பூங்காவைச் சீரமைத்துப் பயன்பாட்டிற்குத் திறந்து விடக் கோரிக்கை

11th Jun 2020 02:42 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிப்பின்றிப் பாழடைந்துள்ளதால் விரைவில் அப் பூங்காவைச் சீரமைத்துப் பயன் பாட்பிற்குத் திறந்து விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் ரூபாய் பல லட்சம் செலவில் அஜீஸ் நகர், ரயில் நிலையம் அருகே மற்றும் வசந்தம் நகர் ஆகிய மொத்தம் 3 இடங்களில் பொழுதுபோக்கு சிறுவர் பூங்காக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டன.

இதில் அஜீஸ் நகர் பூங்கா மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையம் அருகிலுள்ள சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படாமலேயே உரிய பராமரிப்பின்றிப் பாழடைந்து வருவதாக அப்பகுதிவாசிகளிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சிறுவர்களை மகிழ் விக்க வரையப்பட்ட ஓவியங்கள், சிமெண்டாலான சிலைகள், அழகிய வண்ணச் செடிகள், பூச்செடிகள் ஆகிய அனைத்துமே பராமரிப்பின்றிப் பாழடைந்து விட்டதால் அரசு நிதி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஆகவே ரயில் நிலையம் அருகிலுள்ள அச்சிறுவர் பூங்கா வைச் சீரமைத்து ஊரடங்கு முடிந்ததும் பயன்பாட்டிற்குத் திறந்து விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Tags : virudhunagar சிறுவர் பூங்கா விருதுநகர் அருப்புக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT