விருதுநகர்

செல்போன் டவர் மீது ஏறி 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டோ ஓட்டுநர் போராட்டம்: விருதுநகரில் பரபரப்பு

11th Jun 2020 08:48 AM

ADVERTISEMENT

விருதுநகர் பாண்டியன் நகரில் ஆட்டோ ஓட்டுநரான முனியாண்டி என்பவர், காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாகவும் கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விருதுநகர் பாண்டியன் நகர் சின்ன குருசாமி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (38). ரௌடி பட்டியலில் பெயர் உள்ள இவர் மீது கொலை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர், தன்னை காவல்துறையினர் அடிக்கடி துன்புறுத்துவதாக கூறி பாண்டியன் நகரில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். 

மேலும் கையில் பெட்ரோல் கேனுடன் உள்ளார். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் அவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கடந்த மூன்று மணி நேரத்துக்கும் மேலாக டவர் மீது இருந்து கொண்டு கீழே இறங்க மறுத்து வருகிறார்.
 

ADVERTISEMENT

Tags : auto driver virudhunagar protest tower செல்போன் டவர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT