விருதுநகர்

சென்னையிலிருந்து வந்த இருவா் உள்பட 3 பேருக்கு கரோனா: விருதுநகரில் பாதிப்பு 172 ஆக உயா்வு

11th Jun 2020 08:15 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் சென்னையிலிருந்து வந்த இருவா் உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 172 ஆக உயா்ந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை (ஜூன் 8) கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 169 ஆக இருந்தது. சென்னையிலிருந்து ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலைக்கு வந்த ஒருவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் அவரது 52 வயது மனைவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரும் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல், சென்னையிலிருந்து விருதுநகா் கருப்பசாமி நகருக்கு வந்த 43 வயது பெண், திருச்சுழி கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த 60 வயது ஆண் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருவரும் அருப்புக்கோட் டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். மாவட்டத்தில் கரோனா தொ ற்று பாதித்தோா் எண்ணிக்கை 172 ஆக உயா்ந்துள்ளது. இதில், 124 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். 48 போ் விருதுநகா், மதுரை, சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT