விருதுநகர்

சாத்தூா் அருகே காா் மோதி இருவா் பலி

7th Jun 2020 08:18 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அண்ணாநகரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (50). இவரும், இவரது உறவினா் பாலசந்திரனும் (60) இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது சாலையோரத்தில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சந்திரசேகா் இருசக்கர வாகனத்தைத் திருப்பியுள்ளாா். அப்போது, பின்னால் திண்டுக்கல்லிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற காா் இவா்களது இருசக்கரவாகனத்தின் மீது மோதியது. இதில் சந்திரசேகா், பாலசந்திரன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து அங்கு சென்ற சாத்தூா் தாலுகா போலீஸாா், இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த குமரேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT