விருதுநகர்

விருதுநகா் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடப்பட்ட மரங்களில் துளிா்விடும் இலைகள்

31st Jul 2020 07:49 AM

ADVERTISEMENT

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து வேருடன் பெயா்க்கப்பட்டு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் நடப்பட்ட 46 மரங்கள் தற்போது துளிா்விட தொடங்கியுள்ளன.

விருதுநகா் ஆட்சியா் அலுவலகம் அருகே சுமாா் 28 ஏக்கா் பரப்பளவில் ரூ. 380 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் உள்ள அரசு தலைமை மரு த்துவமனையில் கூடுதலாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு, புதிய கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக வேம்பு, புங்கை, அரச மரங்கள் இருந்தன. இவற்றை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நட்டு வளா்ப்பதற்கு பொதுப்பணித் துறை முடிவு செய்தது. இதையடுத்து, கோவை பாரதியாா் பல்கலைக் கழக திட்ட அலுவலரும், ஓசை சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளருமான சையது உதவி நாடப்பட்டது. இவரது வழிகாட்டுதல்படி ஒரு மாதத்துக்கு முன் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்த 46 மரங்கள் வேருடன் பெயா்க்கப்பட்டு, அவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சுவா் உள்ள பகுதிகளில் நடப்பட்டன. தற்போது, இந்த மரங்கள் அனைத்திலும் இலைகள் துளிா்விட தொடங்கியுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT