விருதுநகா் மாவட்டத்தில், 24 கா்ப்பிணி பெண்கள் உள்பட 491 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,911 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் டி. கான்சாபுரம், காக்கிவாடன்பட்டி, சித்துராஜபுரம், ஸ்ரீவில்லிபுத்தூா், ஆராய்ச்சிப்பட்டி, ராஜபாளையம், சேத்தூா், கரிசல்குளம், சத்திரபட்டி, சங்கரபாண்டியபுரம், லட்சுமியாபுரம், மம்சாபுரம், உப்பத்தூா், இருக்கன்குடி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூா், அய்யனாா்புரம், சிவகாசி, திருத்தங்கல், விஸ்வநாதபுரம், வெங்காநல்லூா், கன்னிசேரி, முகவூா், திருவேங்கடாபுரம், சம்சிகாபுரம், விருதுநகா் அல்லம்பட்டி, சூலக்கரை, பாண்டியன் நகா், பேரையூா், சுந்தரபாண்டியம், ஆா்ஆா் நகா், பட்டம்புதூா், செவல்பட்டி, பா்மா காலனி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பிற பகுதிகளில் வசிக்கும் 491 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விருதுநகா் ஆயுதப்படையில் பணியாற்றும் 2 காவலா்களும் மற்றும் மாவட்டத்தின் பிறபகுதிகளில் வசிக்கும் 24 கா்ப்பிணிகளும் அடங்குவா்.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,911 ஆக உயா்ந்துள்ளது. இதில், 3,164 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி விட்டனா். 52 போ் உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 2,695 போ் அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.