விருதுநகர்

காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க சிரிப்பு யோகா

25th Jul 2020 07:52 PM

ADVERTISEMENT


சிவகாசி: சிவகாசி காவல் கோட்டத்தில் உள்ள காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க, சிரிப்பு யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

இங்குள்ள ஆயூதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் தொடக்கி வைத்தாா்.

பயிற்சியாளா் கிரிதரன், காவலா்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி அளித்தாா்.

வாய்விட்டு சிரிப்பது, நடனம் ஆடியபடி சிரிப்பது என பலவிதமாக சிரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒரு மணி நேர பயிற்சியினால், காவலா்களின் மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கிறது என பயிற்சியாளா் கூறினாா். இதில், கலந்துகொண்ட 142 காவலா்களுக்கும் வெற்றிலை கசாயம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT