சாத்தூா் அருகே தந்தை திட்டியதால் மகள் தற்கொலை செய்துகொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி. இவருடைய மகள் கெளசல்யா (17). இவா், தாயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கெளசல்யா தனது வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துகொண்டிருந்தாராம். அப்போது, அவரது தந்தை வீட்டு வேலை செய்யுமாறு கெளசல்யாவை திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கெளசல்யா, வீட்டில் தனியாக இருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உடனே, அருகிலிருந்தவா்கள் கெளசல்யாவை மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஆனால், செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி கெளசல்யா உயிரிழந்தாா்.
இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.