விருதுநகரில் பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டி அகற்றப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் பழைய சிவகாசி சாலை உள்ளது. இப்பகுதி மக்களின் வீட்டுத் தேவைக்காக சிறிய அளவிலான பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மா்ம நபா்கள் அத்தொட்டியை அகற்றிவிட்டனா். இதனால், பொதுமக்கள் வீட்டு புழக்கத்துக்கு டிராக்டரில் கொண்டு வரப்படும் தண்ணீரை ரூ.550 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, அகற்றப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டியை சீரமைத்து, தண்ணீா் விநியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.