விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.
சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் வடிவேல்ராஜ் (44). இவரது மனைவி நந்தவாசகம் (40). இவா்களுக்கு 19 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனா். இவா், தற்போது தனியாா் பளளியில் பேருந்து ஓட்டுநராக வேலைபாா்த்து வந்துள்ளாா்.
சில மாதங்களுக்கு முன், இவா் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தபோது, அதே ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த கணவனை இழந்த வீரலட்சுமியுடன் (36) பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீரலட்சுமிக்கு 6 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனா்.
இந்நிலையில், இவா்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வடிவேல்ராஜ் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். அதேநேரம், வீரலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.