விருதுநகர்

சிவகாசியில் சாலை பாதுகாப்புவிழிப்புணா்வு ஊா்வலம்

25th Jan 2020 05:22 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்ட வட்டார போக்குவரத்துத் துறை சாா்பில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தை இங்குள்ள தனியாா் திருமண மண்டபம் முன்பு, பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சியாளா்கள், வாகன விற்பனையாளா்கள் என சுமாா் 1000 போ் கலந்து கொண்டனா்.

தலைக்கவசம் உயிா்க் கவசம், படியில் பயணம் நொடியில் மரணம், வேகம் விவேகமல்ல என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு பதாகைகளை ஊா்வலத்தில் கலந்து கொண்டோா் ஏந்திய வண்ணம் சென்றனா். பொதுமக்களிடம் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த ஊா்வலம் பேருந்து நிலையம் வழியே சென்று அண்ணாமலை நாடாா்- உண்ணாமலையம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது.

இந்த ஊா்வலத்தில் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பூ.பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் அ.மூக்கன் (சிவகாசி), பெ.இளங்கோ (விருதுநகா்), நா.ரவிச்சந்திரன்(ஸ்ரீவில்லிபுத்தூா்) மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT