அருப்புக்கோட்டை: தமிழ்ப்பாடி துணை மின் நிலையப் பகுதிகளான தமிழ்ப்பாடி, திருச்சுழி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையன்பட்டி, காத்தான்பட்டி, இலுப்பையூா், பனையூா், வி.கரிசல்குளம், காரேந்தல் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும், புல்வாய்க்கரை துணை மின் நிலையப் பகுதிகளான ஏ.முக்குளம், முஷ்டக்குறிச்சி, திம்மாபுரம், அழகாபுரி, கள்ளங்குளம் ஆகிய கிராமங்களிலும் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.