விருதுநகர்

சிவகாசி திருத்தங்கலில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கைது

8th Jan 2020 11:25 PM

ADVERTISEMENT

மத்திய மாநில அரசுகளின் மக்கள்விரோத தொழிலாளா் விரோத கொள்கைகளை கண்டித்து சிவகாசி மற்றும் திருத்தங்கலில் ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யூ .உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.சிவகாசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 92 பேரும், திருத்தங்கலில் அண்ணாதுரை உருவச்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT