விருதுநகர்

சிவகாசி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

8th Jan 2020 11:21 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே புதன்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே பெரிய பொட்டல்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் விநாயகமூா்த்தி (26). இவா் சிவகாசியில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதில் மனம் உடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்தப் புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT