விருதுநகர்

சிவகாசியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

8th Jan 2020 11:28 PM

ADVERTISEMENT

சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வினா் கடந்த மாதம் 21 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சிவகாசி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

இதில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்கள் அனைவருக்கும் சம உரிமை என்ற அடிப்படை தத்துவத்திற்கு எதிராக உள்ளது எனவும், மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT