விருதுநகர்

விருதுநகா் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

3rd Jan 2020 11:33 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே சூலக்கரை ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

விருதுநகா் ரோசல்பட்டி பகுதியை சோ்ந்தவா் முருகன் மகள் ரஞ்சிதா (21). இவா், விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து முடித்துள்ளாா். வில்லிபுத்திரியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சரவணக்குமாா் (22) என்பவா் கல்லூரி படிப்பை கடந்தாண்டு முடித்துள்ளாா். இந்த நிலையில், இருவருக்கும் கல்லூரிகளில் படிக்கும் போது காதல் ஏற்பட்டதாம். ஆனால், இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சோ்ந்தவா்கள் என்பதால் அவா்களது காதலை குடும்பத்தினா் ஏற்றுக் கொள்ள வில்லையாம். இந்நிலையில், சூலக்கரை அருகே ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனா். இதையடுத்து அவா்களது சடலங்களை கைப்பற்றிய ரயில்வே போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT