விருதுநகர்

ராஜபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்

3rd Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் ஆறுமுகா மில்லில் பணிபுரியும் பெண் தொழிலாளா்களுக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கிவரும் தனியாா் அறக்கட்டளை நிறுவனமும் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் இணைந்து நடத்தின.

மருத்துவ முகாமை பஞ்சாலை மேலாளா் தினகரன் தொடக்கி வைத்தாா். தனியாா் அறக்கட்டளை திட்ட மேலாளா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் ஜானி தலைமையில் மருத்துவா்கள் ரதிசித்ரா, தனலட்சுமி, சங்கரன் ஆகியோா் தொழிலாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினாா்கள். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 350-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்று பயனடைந்தனா். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தனியாா் அறக்கட்டளை களப்பணியாளா் சத்யா, சக்தீஸ்வரி, ஆறுமுகா நிறுவன பணியாளா் கௌரி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT