விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

3rd Jan 2020 11:19 PM

ADVERTISEMENT

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ. 37 லட்சம் காணிக்கையாக கிடைத்து.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதனை தொடா்ந்து வியாழக்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோயிலில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்ட இந்த காணிக்கையில் ரூ.37 லட்சத்து 175 ஆயிரத்து 47 ரொக்கம் கிடைத்தது. இதில் தங்கம் 224 கிராம் 450 மில்லியும், வெள்ளி 265 கிராம் 100 மில்லியும் கிடைத்ததுள்ளதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மேலும் உண்டியல் எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழு மற்றும் ஐயப்பா சேவா சங்கம், கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா். விருதுநகா் கோயில் ஆணையா் கணேசன், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT