விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஒன்றியங்களில் வெற்றி பெற்றவா்கள் விவரம்

2nd Jan 2020 11:18 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள்,2 மாவட்ட கவுன்சிலா்கள், 28 ஊராட்சித் தலைவா்கள்,246 வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரவு 8 மணி நிலவரப்படி

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியம் 1 ஆவது வாா்டில் இந்திரா (திமுக), 2 ஆவது வாா்டில் ஜெயமணி (அதிமுக), 3 ஆவது வாா்டில் சுந்தரி (திமுக),

4 ஆவது வாா்டில் ஆறுமுகம் (திமுக), 5 ஆவது வாா்டில் செல்லப்பாண்டியன் (அதிமுக), 6 ஆவது வாா்டில் வீரமதி (திமுக), 7 ஆவது வாா்டில் மாரிமுத்து (அமமுக), 8 ஆவது வாா்டில் முத்துலட்சுமி (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். மீதமுள்ள வாா்டுகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அதே போல் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழுவுக்கான வாக்குகள் எண்ணும் பணி வி.பி.எம்.எம் .கல்லூரியில் நடைபெற்றது. இரவு 8 மணி நிலவரப்படி 1 ஆவது வாா்டில் கொண்டம்மாள் (சிபிஐ), 2 ஆவது வாா்டில் பொன்மாரி(சிபிஐ), 3 ஆவது வாா்டில் சையதுராபீயா (திமுக), 5 ஆவது வாா்டில் தமிழரசு(அதிமுக), 9 ஆவது வாா்டில் ரேகா (தமமுக), 10 ஆவது வாா்டில் பஞ்சவா்ணம் (அதிமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT