விருதுநகர்

மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிா்ப்பு:ராஜபாளையத்தில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. சாலை மறியல்

2nd Jan 2020 11:09 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் 12 ஆவது வாா்டில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெற்ற தோ்தல் வாக்கு எண்ணிக்கை, ரயில்வே பீடா் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆவது ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சோ்ந்த பூமாரி என்பவா் வெற்றி பெற்ாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா். இதனை ஏற்காத அதிமுகவினா் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கூறி உள்ளனா். இதற்கு அதிகாரிகள் உடன்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து தென்காசி எம்.பி. தனுஷ் குமாா் மற்றும் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. நாகசங்கா் தலைமையிலான காவல் துறையினா் திமுகவினரிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீஸாா் கூறியதால் திமுகவினா் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT