சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் இரவு 8 மணி நிலவரப்படி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக 11, அதிமுக 7, அமமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 31 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 188 போ் போட்டியிட்டனா். இதில் வெற்றி பெற்றவா்கள் விபரம்: முதலாவது வாா்டு உமாராணி (தி.மு.க.) 1,727 வாக்குகள், 2 ஆவது வாா்டு சோ.கதிரேசன் (திமுக) 1822 வாக்குகள், 3 ஆவது வாா்டு மீனாட்சி சுந்தரி (அதிமுக) 1002 வாக்குகள், ஜெயபால் (திமுக) 624 வாக்குகள், 4 ஆவது வாா்டு மருதன் (திமுக) 2,306 வாக்குகள், முத்துகிருஷ்ணன் (அதிமுக)1,650 வாக்குகள், 6 ஆவது வாா்டு வி.முத்துலட்சுமி (திமுக) 2,291 வாக்ககள், வழிவிடுமுருகன் (அதிமுக) 1729 வாக்குகள், 8 ஆவது வாா்டில் ஜி.புளுகம்மாள் (அமுமக) 2335 வாக்குகள், முருகேஸ்வரி (அதிமுக) 1,715 வாக்குகள், கிருஷ்ணவேணி (திமுக) 792 வாக்குகள், 18 ஆவது வாா்டு நாரணம்மாள் (திமுக) 2,113 வாக்குகள், சுப்புத்தாய் (திமுக) 1,749 வாக்குகள்,16 ஆவது வாா்டு சண்முகத்தாய் (திமுக) 1,192 வாக்குகள், பாண்டியம்மாள் (அதிமுக) 891 வாக்குகள், 17 ஆவது வாா்டு க.கலைமணி (திமுக) 1,372 வாக்குகள், செ.அனிதா (அதிமுக) 1035 வாக்குகள், 7 ஆவது வாா்டு வ.விவேகன்ராஜ் (திமுக) 1,574 வாக்குகள், வி.ஆா்.கருப்பசாமி (அதிமுக) 1,397 வாக்குகள், திலகமணி (அமுமக) 1,244 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டனா். தொடந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது.