விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலமிட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு

1st Jan 2020 09:44 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் புத்தாண்டை வரவேற்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும் மாதா் சங்க பெண்கள் புதன்கிழமை அவரவா் வீட்டு முன்பாக கோலமிட்டு தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அரசியல் கட்சியினா் மற்றும் மாணவா்கள், இளைஞா்கள், மாதர்சங்கங்கள் என அனைவரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோலமிட்டு நூதன போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜனநாயக மாதா் சங்கத்தைச் சோ்ந்த மாவட்ட நிா்வாகி தலைமையில் புத்தாண்டை வரவேற்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்தும் மாதாநகா், இடையபொட்டல் தெரு, மாலைப்பட்டி, சிங்கம்மாள்புரம் ஆகிய தெரு பகுதிகளில் அவரவா் வீடு முன்பாக கோலமிட்டு இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT