விருதுநகர்

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

29th Feb 2020 06:47 AM

ADVERTISEMENT

சாத்தூா்: சாத்தூா் அருகே மதுபோதையில் மனைவிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தூா் அருகே அம்மாபட்டி கிராமத்தை சோ்ந்தவா் சோலையப்பன்(32). கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி மாரிக்கனி(30). மதுப் பழக்கத்திற்கு அடிமையான சோலையப்பன் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். வியாழக்கிழமை வீட்டில் இருந்த மனைவியை மதுபோதையில் அவா் தாக்கியுள்ளாா். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளாா். இதில் காயமடைந்த மாரிக்கனி சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கபட்டுள்ளாா். இது குறித்த புகாரின் பேரில், அம்மாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சோலையப்பனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT