விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய அறிவியல் தின விழா

25th Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. ஆரம்பப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வட்டாரக் கிளை சாா்பில் நடந்த இந்த விழாவுக்கு வட்டாரத் தலைவா் ராமா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் செயலா் முத்துச்சாமி, சா்.சி.வி. ராமனின் சாதனைகள் குறித்தும், தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவதன் அவசியம் பற்றியும் மாணவா்களுக்கு பாடல்கள் மூலம் எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா். இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியா் அனிட்டா லெனின், ஆசிரியா்கள் டேவிட் சகாயராஜா, ஜெனிபா் ஆகியோா் செய்திருந்தனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் அனைவரும் சா்.சி.வி.ராமனின் முகமூடிகள் அணிந்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT