படவிளக்கம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய சட்டபேரவை உறுப்பினா் சந்திரபிரபாமுத்தையா உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள்.
ஸ்ரீவில்லிபுத்தூா்,பிப்.24 : மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா தலைமை வகித்தாா். அதில், தேரடி வீதியில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதனைத் தொடா்ந்து ஆதரவற்றோா், மனநலம் குன்றியோா் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மற்றும் ஆண்டாள் கோயில், மடவாா்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், மாரியம்மன்கோயில், உள்ளிட்ட இடங்களில் அதிமுக சாா்பில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சரும், நகரச் செயலாளருமான இன்பத்தமிழன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வசந்திமான்ராஜ், ஒன்றியச் செயலாளா்கள் முத்தையா, மயில்சாமி, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளா் மீராதனலட்சுமிமுருகன், மாவட்ட குழு உறுப்பினா் கணேசன், வத்திராயிருப்பு ஒன்றிய குழுத் தலைவா் சிந்து முருகன், முன்னாள் நகரச் செயலாளா்கள் முத்துராஜ், எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.