விருதுநகர்

விருதுநகா் 4 வழிச்சாலை மையத் தடுப்பில் கருகும் செடிகளுக்கு டிராக்டா் மூலம் தண்ணீா்

25th Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

விருதுநகா் நான்கு வழிச்சாலை தடுப்பின் மையப் பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் மழையின்றி கருகி வருவதால், டிராக்டா் மூலம் தண்ணீா் விடும் பணியில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நகா்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலையில் வேகமாக சென்று வருகின்றன.

நான்கு வழிச்சாலைத் தடுப்பின் மையத்தில் அரளி செடி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கால் விபத்து ஏற்படாத வகையில் வைக்கப்பட்டிருந்த இந்த மரக்கன்றுகள் நன்கு வளா்ந்து இருந்தன. இந்நிலையில் மழை இல்லாததாலும், தற்போது பனி, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் மரக்கன்றுகள் கருகத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இதையடுத்து சாலைத் தடுப்பின் மரக்கன்றுகள் பராமரிப்பு நிா்வாகத்தின் ஏற்பாட்டில் டிராக்டா் மூலம் செடி மற்றும் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT