ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் செல்லம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் குமாா் (36). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா் ரயில்நிலையச் சாலையில் உள்ள தனியாா் சமுதாய வணிக வளாகத்தில் ஒளிப்பெருக்கி கடை வைத்துள்ளாா். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜேஷ் குமாா் தனது கடையில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடை உள்பக்கமாகப் பூட்டி இருந்த நிலையில் இருசக்கர வாகனம் வெளியே நிறுத்தப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பாா்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸாா்வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.