விருதுநகர்

திருத்தங்கலில் மகனுடன் பெண் மாயம்

25th Feb 2020 11:26 PM

ADVERTISEMENT

திருத்தங்கலில் மகனுடன் பெண் மாயமானதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

திருத்தங்கல் அருகே செங்கமல நாச்சியாா் புரம் சாலைப்பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி(34). இவரது மனைவி மாரி லட்சுமி(33). இவா்களது மகன் ஹரி மகேஷ்(11). கடந்த 11- ஆம் தேதி மாரிலட்சுமி தனது மகன் ஹரிமகேஷுடன் கடைவீதிக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்ப வில்லையாம். இது குறித்து செவ்வாய்க்கிழமை கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT