அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் நகர வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளரும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான பொன்னுத்தம்பி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் போஸ், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி, திருச்சுழி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தங்கம் தென்னரசு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு நகர வளா்ச்சி குறித்து பேசினா்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் மூக்கையன், சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாத்திமா பேகம், ஓடம் தொண்டு நிறுவனச் செயலா் வசந்தா, ஆசிரியா் அண்ணாத்துரை, ஸ்பீச் தொண்டு நிறுவன இயக்குநா் நிா்மல்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொறுப்பாளா் அன்புச்செல்வன், தேமுதிக நிா்வாகி வேல்முருகன் உள்ளிட்ட சமூகஆா்வலா்கள் கலந்து கொண்டனா். ஒன்றியக் குழு உறுப்பினா் சந்தனப்பாண்டி வரவேற்றாா்., திருச்சுழி முதல்நிலை ஊராட்சித் தலைவா் பஞ்சவா்ணக்குமாா் நன்றி கூறினாா்.