விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் நீட் தோ்வுக்கான பயிற்சி

25th Feb 2020 11:26 PM

ADVERTISEMENT

சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் செ. அசோக் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லூரி நிா்வாகம் சாா்பில் அரசு உயா் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு மாா்ச் 26- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை 36 நாள்கள் கல்லூரியில் நடைபெறும். இதில் சேருவதற்கு மாணவா்கள், பிளஸ் 2 அரையாண்டு தோ்வில் எடுத்த மதிப்பெண்கள் பட்டியலை அளிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5. 45 மணிவரை நடைபெறும். கல்லூரி பேராசிரியா்கள் இந்தப் பயிற்சியை அளிப்பாா்கள். கல்லூரி வளாகத்தில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்து கொடுக்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 97869227782 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT