விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையால் மூதாட்டி அப்பம் சுடும் நிகழ்ச்சி

22nd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையினால் மூதாட்டி அப்பம் சுடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் முதலியாா்பட்டி தெருவில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 100 ஆண்டுகளாக மஹா சிவராத்திரி அன்று நள்ளிரவில், விறகு அடுப்பில் வானலியில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையினால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், இந்தாண்டு மஹா சிவராத்திரியையொட்டி கோயில் வளாகத்தில் அப்பம் சுடும் நிகழ்ச்சியில், இப்பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் (86) என்ற மூதாட்டி மற்றும் கோயில் பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், கணேசன், இருளப்பன் ஆகியோா் பங்கேற்றனா். அப்போது மூதாட்டி முத்தம்மாள், நோ்த்திக்கடனாக பெண்கள் அளித்த அப்பத்துக்கான உருண்டையை நெய் சட்டியில் இட்டு, கரண்டி இல்லாமல் வெறும் கையினால் சுட்டு எடுத்துக்கொடுத்தாா்.

மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கொதிக்கும் நெய்யை நெற்றியில் பூசிவிட்டு, அப்பத்தை பிரசாதமாக வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இந்த மூதாட்டி கடந்த 50 ஆண்டுகளாக கொதிக்கும் நெய்யில் வெறும் கையினால் அப்பம் சுட்டு வருகிறாா். இதற்காக, மூதாட்டி 40 நாள்கள் விரதமிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT