விருதுநகர்

ராஜபாளையம் பகுதி கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்

22nd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் மஹா சிவராத்திரியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.

மதுரை சாலையில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மாயூரநாதசுவாமி கோயிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி, நான்கு கால அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.

இதேபோல், மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்ரபாண்டீஸ்வரா் கோயில், ராஜபாளையம் அம்பலபுளி பஜாா் குருசாமி கோயில், சொக்கநாதன்புத்தூா் தவநந்திகண்டேஸ்வரா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிங்கத்திருளப்பசுவாமி கோயில், ஜவகா் மைதானம் பின்புறம் உள்ள அங்காள ஈஸ்வரி கோயில், மாப்பிள்ளை சுப்பையா தெருவில் உள்ள மாதாங் கோயில், முகில் வண்ணம்பிள்ளை தெருவில் உள்ள சடை உடையாா் சாஸ்தா கோயில் என சில சமுதாயத்தினருக்கான ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள குலதெய்வக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT