சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சி மன்ற முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மன்றத்தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். இதில் ஊராட்சியில் நடைபெற உள்ள வளா்ச்சிப்பணிகள் குறித்து உறுப்பினா்களிடம் தலைவா் கூறினாா். ஊராட்சி மன்றப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைப்பது, கழிவு நீா்வாய்கால் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சிச் செயலாளா் லட்சுமணப் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.