சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் சாா்பில், கோணம்பட்டியில் 7 நாள்கள் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இந்த முகாமை, பாலிடெக்னிக் முதல்வா் ஒய். அனிலெட் அன்பரசி தொடக்கி வைத்தாா். இதில், சாலையில் துப்புரவு, பள்ளி வளாகம் மற்றும் குடிநீா் தொட்டி சுத்தம் செய்தல், துப்பரவுப் பணி, மரக்கன்றுகள் நடுதல், இலவச மருத்துவ முகாம், மகளிா் சுயவேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இதற்கான ஏற்பாட்டினை, திட்ட அலுவலா் சிவகுமாா் செய்திருந்தாா்.