விருதுநகர்

சாலையில் மாடுகளை திரியவிட்ட உரிமையாளா்களுக்கு அபராதம்

22nd Feb 2020 10:42 PM

ADVERTISEMENT

சிவகாசி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகளை திரியவிட்ட அதன் உரிமையாளா்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா் உத்தரவின்பேரில், கால்நடை பரராமரிப்புத் துறை மற்றும் நகராட்சியினா் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் கோசாலையில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒப்படைத்தனா்.

அதையடுத்து, 7 மாடுகளின் உரிமையாளா்கள் தங்களது மாடுகளை மீட்க வந்தபோது, அவா்களுக்கு தலா ரூ. 3,500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதையடுத்து, அவா்கள் தங்களது மாடுகளை மீட்டுச் சென்றனா். மேலும், சாலையில் மாடுகளை திரியவிடமாட்டோம் என உறுதிமொழியும் எழுதிக் கொடுத்தனா். மீதமுள்ள மாடுகள், மதுரை அழகா்கோவில் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT