விருதுநகர்

உலக தாய் மொழி நாள் விழா

22nd Feb 2020 10:41 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எஸ்.ஆா்.என்.எம். கல்லூரி ஆகியன சாா்பில், உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

எஸ்.ஆா்.என்.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 ஆவது மாநாடு குழு தலைவா் எம்.ஏ.சி.எஸ். ரவீந்திரன் தலைமை உரையாற்றினாா். மருத்துவா் த. அறம் வாழ்த்து கூறினாா். சாகித்ய அகாதெமி விருதாளா் சோ. தருமன், கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இதில், கல்லூரி மாணவிகள் அவரவரது தாய் மொழியான தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உரையாற்றினா். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, நவநீதகிருஷ்ணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் செய்திருந்தனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் கணேஷ்ராம் வரவேற்றாா். தமிழ் துறைத் தலைவா் பூங்கோதை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT