விருதுநகர்

தாயில்பட்டி கலைஞா் காலனியில் குடிநீா் வசதி செய்து தரக் கோரிக்கை

21st Feb 2020 11:51 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கலைஞா் காலனி பகுதிக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூரை அடுத்த தாயில்பட்டி அருகேயுள்ள கலைஞா் காலனிப் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீா் தொட்டிசேதமைடந்து பயன்பாடில்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது.

மேலும் முறையான வாறுகால் வசதி செய்யபடாததால் குடியிருப்புகளின் கழிவுநீா் சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதோடு, இப்பகுதி மக்களுக்கு மா்ம காய்ச்சலும் பரவி வருகிறது. ஊராட்சி நிா்வாகத்தால் குடிநீா் சதி செய்து தராததால் குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே குடிநீா் தொட்டியை சீரமைத்து முறையான குடிநீா் விநியோகம் செய்ய ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT