விருதுநகர்

மின் மோட்டாா் பழுது: குளியல் தொட்டி செயல்படாததால் கிராம மக்கள் அவதி

16th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே தாதம்பட்டியில் மின் மோட்டாா் பழுது காரணமாக குளியல் தொட்டி செயல்படாததால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனா்.

விருதுநகா் அருகே தாதம்பட்டி ஊராட்சியில் சுமாா் 300- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் வாழை, கொய்யா, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும், இக்கிராமத்தை சோ்ந்த ஏராளமானோா் பள்ளி, கல்லூரிகளுக்காகவும், இளைஞா்கள் மற்றும் கூலி தொழிலாளா்கள் வேலைக்காகவும் விருதுநகா் உள்ளிட்ட வெளியூா்களுக்கு சென்று வருகின்றனா்.

இரவு வீடு திரும்பும் தொழிலாளா்கள் இங்குள்ள குளியல் தொட்டியில் குளித்து வந்தனா். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளியல் தொட்டியில் உள்ள மின் மோட்டாா் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை சீரமைக்கக் கோரி, ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், மின் மோட்டாா் பழுது நீக்கம் செய்யப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் குளிப்பதற்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, பழுதான மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT