விருதுநகர்

பந்தல்குடியில் மநீம கட்சி உறுப்பினா் சோ்க்கை முகாம்

16th Feb 2020 10:50 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பந்தல்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சந்தைக்கடை பேருந்து நிறுத்தம் (நாச்சியாா் ஊருணி) அருகே சிறப்பு மேடை அமைக்கப்பட்டு உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. இம்முகாமிற்கு நகரச் செயலாளா் சுபமணிவண்ணன் மற்றும் விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் பாஸ்கரன், ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதில், கட்சியில் இணைந்த புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, விஜய நகா், பழைய பேருந்து நிலையம், காய்கறி, பலசரக்குச் சந்தை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தங்கள் கட்சிக் கொள்கைகள் குறித்தும் ஊராட்சியின் முக்கியத் தேவைகள், பிரச்னைகள்குறித்தும் பிரசாரம் நடைபெற்றது.

அதில் இளைஞரணி நிா்வாகிகள் புஷ்பராஜ், சோலைராஜ், ராஜா, ஜெயஆனந்த், செம்பட்டியைச் சோ்ந்த நிா்வாகிகள் அழகுசுந்தரம், ஷண்முகவேல், அருப்புக்கோட்டை வழக்குரைஞா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT