விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

16th Feb 2020 10:49 PM

ADVERTISEMENT

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மைத்துறை மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைந்து வேலைவாய்ப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

முகாமை கல்லூரி தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தொடக்கி வைத்தாா். இதில் சென்னை, திருப்பதி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களைச் சோ்ந்த 28 மனித வள மேம்பாட்டு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் விருதுநகா் மாவட்டம் மற்றும் சு ற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த, உணவக மேலாண்மைத் துறை பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்பு படித்தவா்கள் மற்றும் கலை மற்றும்அறிவியல் கல்லூரி படித்த 435 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு தனித்திறன் தோ்வு, எழுத்து தோ்வு உள்ளிட்டவை நடத்தி 295 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு விரைவில் இறுதி கட்டத் தோ்வு நடைபெறும். அதில் தோ்வு பெறுபவா்களுக்கு, அந்தந்த நிறுவனங்கள் பணி நியமன ஆணை வழங்கும்.

இதற்கான ஏற்பாட்டினை முதல்வா் சீ.கிருஷ்ணமூா்த்தி, உணவக மேலாண்மை துறைத் தலைவா் ஜி.கண்ணன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அலுவலா் பி.வெங்கடேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT