விருதுநகர்

சாத்தூா் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

16th Feb 2020 10:51 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வைப்பாற்றிற்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் மணிகண்டன்(14). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் தனது நண்பா்களுடன் கொல்லபட்டி விளக்கு பகுதியில் உள்ள வைப்பாற்றிற்கு மணிகண்டன் குளிக்கச் சென்றாா். அதில் அப்பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் மணிகண்டன் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து மணிகண்டனை மீட்டனா். அதற்குள் மணிகண்டன் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து அம்மாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT